இந்தியன் வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை


இந்தியன் வங்கியில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை
x
தினத்தந்தி 20 Feb 2018 6:53 AM GMT (Updated: 20 Feb 2018 7:11 AM GMT)

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்தியன் வங்கி சென்னை கிளைக்கு கிளார்க் மற்றும் ஆபீசர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ந்தியன் வங்கியின் சென்னை கிளை விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் கிளார்க் மற்றும் ஆபீசர் பணியிடங்களை அறிவித்துள்ளது. ஜே.எம்.ஜி. ஸ்கேல்–1 தரத்திலான இந்த பணிகளுக்கு மொத்தம் 21 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கூடைப்பந்து – 6 பேர், கிரிக்கெட் 7 பேர், கைப்பந்து –5 பேர், ஆக்கி 3 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 26 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 12–ம் வகுப்பு தேர்ச்சியுடன், மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுகளில் குறிப்பிட்ட சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சுயசான்றொப்பம் செய்யப்பட்டு தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.   Assistant General Manager (HRM), HRM Department, Corporate Office, Indian Bank, 254260 Avvai Shanmugham Salai, Chennai, Tamil Nadu 600014   என்ற முகவரிக்கு 3-3-2018–ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை   http://indianbank.in/career.php  என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story