காற்று மாசுக்கு எதிராக களமிறங்கிய ஐ.ஐ.டி.


காற்று மாசுக்கு எதிராக களமிறங்கிய ஐ.ஐ.டி.
x
தினத்தந்தி 20 Feb 2018 8:02 AM GMT (Updated: 20 Feb 2018 8:02 AM GMT)

ஐ.ஐ.டி.யின் டெல்லி கிளை, காற்று மாசுக்கு எதிராக தனி ஆராய்ச்சிப் பிரிவை சமீபத்தில் தொடங்கி உள்ளது.

ந்திய பெருநகரங்களின் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெருநகர மக்களை காற்றுமாசு அச்சுறுத்தி வருகிறது. புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.யின் டெல்லி கிளை, காற்று மாசுக்கு எதிராக தனி ஆராய்ச்சிப் பிரிவை சமீபத்தில் தொடங்கி உள்ளது. ‘சென்டர் ஆப் எக்செலன்ஸ் பார் ரிசர்ச் ஆன் கிளீன் ஏர்’   (CERCA)  எனப்படும் இந்தப் பிரிவு காற்று மாசு ஆராய்ச்சித் திட்டங்கள், தீர்வுகள் நோக்கிய ஆராய்ச்சியை தொடர உள்ளது. அது பற்றிய படிப்பு, கருத்தரங்கங்களையும் வழங்க இருக்கிறது. அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளின் நிதி உதவி, ஒத்துழைப்புடன் காற்று மாசுக்கு எதிரான ஆராய்ச்சி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story