உச்சிப்புளி அருகே மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை, அண்ணன் கைது


உச்சிப்புளி அருகே மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை, அண்ணன் கைது
x
தினத்தந்தி 21 Feb 2018 4:00 AM IST (Updated: 21 Feb 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி அருகே மாற்றுத்திறனாளியான தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ள பெருங்குளம் சேதுபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகைசாமி. இவருடைய மகன்கள் கண்ணன் (வயது 38), ஜீவானந்தம் (28). இதில் கண்ணனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவரது தம்பி ஜீவானந்தம் பிறவியிலேயே கை, கால் ஊனமுற்றதுடன் கண்பார்வையும் தெரியாதவர். இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக சகோதரர்களிடையே தகராறு இருந்து வந்தது. அதுதொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கண்ணன், தனது தம்பியான ஜீவானந்தத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

அதில் பலத்த காயமடைந்த ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி, உச்சிப்புளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story