மருத்துவமனை ஊழியருக்கு 1 ஆண்டு ஜெயில்


மருத்துவமனை ஊழியருக்கு 1 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 21 Feb 2018 2:30 AM IST (Updated: 21 Feb 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

நோயாளிகளிடம் பண மோசடி செய்ததாக மருத்துவமனை ஊழியருக்கு 1 ஆண்டு ஜெயில் விதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பையில் உள்ள பிரபல புற்றுநோய் மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வந்தவர் ஹனுமந்த். இவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் எழுதி கொடுக்கும் மருந்து சீட்டில் கூடுதலாக சில அதிக விலையுடைய மருந்துகளை எழுதி, அதற்காக நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கடந்த 2008–ம் ஆண்டு கைது செய்து, சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து கோர்ட்டு அவருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.


Next Story