தாராவி கருமாரியம்மன் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு


தாராவி கருமாரியம்மன் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 Feb 2018 2:42 AM IST (Updated: 21 Feb 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக தாராவி கருமாரியம்மன் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மும்பை,

மும்பை தாராவி தேவர்நகரில் தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்கம் நிர்வகித்து வரும் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உள்ள பகுதி வழியாக 3–வது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளும் அந்த பகுதியில் நடந்து வருகின்றன.

மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்காக கருமாரியம்மன் கோவிலின் ஒரு பகுதியை இடிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு தேவர்நகர் மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக ராகுல் செவாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வர்ஷா கெய்க்வாட், கேப்டன் தமிழ்ச்செல்வன், பா.ஜனதா மும்பை செயலாளர் சுனில் ரானே, தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க தலைவர் பி.எஸ்.கே. முத்துராமலிங்கம், கோவில் தர்மகர்த்தா சுப்பையா தேவர் உள்பட பலரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று மாலை 4 மணியளவில் என்ஜினீயர்கள் கோவிலின் இடிக்கப்படும் பகுதி குறித்து விளக்கினார்கள். அப்போது, தேவர் நகர் மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.


Next Story