பண மோசடி வழக்கில் பல்கலைக்கழக துணை பதிவாளர் கைது
பாபாசாகேப் அம்பேத்கர் மரத்வாடா பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளராக பணியாற்றி வருபவர் ஈஸ்வர் மான்சா.
அவுரங்காபாத்,
தியோராவ் சவான் என்பவரிடம் நகரில் உள்ள கல்லூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஈஸ்வர் மான்சா ரூ. 6 லட்சம் வாங்கினார். ஆனால் உறுதி அளித்தது போல அவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் தியோராவ் சவான் தான் கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு கேட்டார். முதல் தரமறுத்த ஈஸ்வர் மான்சா, தியோராவ் தொடர்ந்து நச்சரிக்கவே வேறு வழியின்றி ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார். ஆனால் அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தியோராவ் சவான் இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் துணை பதிவாளர் ஈஸ்வர் மான்சாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story