ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
மேச்சேரி அருகே நண்பர்களுடன் குளித்த போது ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
மேச்சேரி,
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கூனாண்டியூரில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஆறு ஓடுகிறது. இந்த பகுதியில் சிலர் மீன் பிடித்து, சமைத்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஜலகண்டாபுரம் அருகே செலவடை வெண்ணணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 21). இவர் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தனது நண்பர்கள் தினேஷ், கபிலன் உள்பட 6 பேருடன் நேற்று மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு சென்றனர். அங்கு மீன்குழம்பு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் அங்கு ஓடும் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். கோவிந்தராஜிக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றின் ஓரத்தில் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே அவர் சத்தம் போடவே, அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் விரைந்து சென்று கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story