தேர்தல் நெருங்குவதால் சட்டசபை கூட்டத்தொடர் 23-ந் தேதியுடன் நிறைவடைகிறது
கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார்.
பெங்களூரு,
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் சபை 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள சித்தராமையா 2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தில் நேற்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த பா.ஜனதா உறுப்பினர் விசுவேஸ்வர ஹெக்டே காகேரி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “கர்நாடக சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், சபை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முன்கூட்டியே வருகிற 23-ந் தேதியுடன் நிறைவடைகிறது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு சித்தராமையா 22-ந் தேதி(அதாவது நாளை) பதிலளிப்பார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு நாளை(அதாவது இன்று) சித்தராமையா பதிலளிப்பார்“ என்று கூறினார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து, “பட்ஜெட் கூட்டத்தொடர் 28-ந் தேதி வரை நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த அரசு தற்போது திடீரென்று கூட்டத்தொடரை முன்கூட்டியே 23-ந் தேதியுடன் நிறைவு செய்வதாக அறிவிக்கிறது. இது சரியல்ல. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்“ என்றார்.
அப்போது முதல்-மந்திரி சித்தராமையா எழுந்து, “தேர்தல் நெருங்குவதால் கட்சி பணிகள் இருக்கிறது. உங்களுக்கும்(எதிர்க்கட்சிகள்) அதே போல் கட்சி பணிகள் உள்ளன. அதனால் சபையை முடிக்க வேண்டியுள்ளது“ என்றார். நேற்றைய கூட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் உறுப்பினர்கள் இருந்தனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. உறுப்பினர்கள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Tags :
Next Story