அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயம் கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்
அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படுகிறது என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
கரூர்,
கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பாக சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவளம் தொடர்பான பயிற்சி வகுப்பு புலியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. பயிற்சியை கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணிகள் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் நவீன மயமாக்குதலின் ஒரு பகுதியாக கருவூல மற்றும் கணக்குத்துறையின் பணிகள் அனைத்தும் மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக அரசால் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசுத்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்திலுள்ள அரசுத்துறை சார்ந்த ஊழியர்களின் பணிப்பதிவேடுகளிலுள்ள விவரங்கள் அனைத்தும் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளில் பதிவேற்றம் செய்து தற்போது மென்படி பணிப்பதிவேடாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது இப்பணி கரூர் மாவட்டத்தில் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக கருவூலத்துறை மேற்கொள்ளும் சம்பளம் மற்றும் சம்பளம் சாரா பணப்பரிவர்த்தனையை அரசு துறை அலுவலகங்களிலிருந்து வலைதள மூலமாக பட்டியல்கள் பெற்று ஏற்பளிப்பு செய்யும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
வலைதள மென்பொருள் மூலம் அனைத்து வகை பட்டியல்கள் தயாரித்து ஆன்லைனிலேயே கருவூலத்திற்கு பட்டியல்கள் அனுப்பி ஏற்பளிப்பு செய்யும் முறையும் பயனாளிகளுக்கு பணப்பலன் அதன் வாயிலாக பெறுவதற்குரிய முறைகளும் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக அரசு அலுவலகங்களில் இப்பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு மென்பொருளில் உரிய பயிற்சி அளிப்பதற்காக பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 40 அரசு அலுவலகங்கள், பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிற 24-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் அரசுக்கு துல்லியமான வரவு- செலவு விவரங்களை உடனுக்குடன் வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்கள் குறித்த விவரங்கள் மின்னணு செயலாக்கம் செய்யப்படுவதால் பொதுவான விவரங்கள் தொகுத்து பெறுவதற்கு எளிமையாக இருக்கும்.-]
அரசு ஊழியர்களின் பலன்கள் விரைவாக பெறுவதற்கு வழிவகை செய்யும். பட்டியல் தயாரிப்பு பணிப்பதிவேடு பதிவுகள் மேற்கொள்ளுதலில் மனித தவறுகள் குறைக்கப்படும். தேவைப்படும் விவரங்கள் தேடுதல் எளிமையாகிறது. வரவு-செலவு பட்டியல் தயாரிப்பில் தொழில் நுட்பத்துடன் செய்வதற்கு வழிவகை செய்கிறது. ஒத்திசைவு மற்றும் கணக்கு தயாரித்தல் போன்றவற்றில் கால விரயம் தவிர்த்தல் மற்றும் அனைத்து விவரங்களும் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் வைத்திருக்க உதவும். இந்த பயிற்சியை பயன்படுத்தி இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தி அனைத்து துறை அலுவலர்களும் பயன்பெற வேண்டும்.
இதில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை கோவை மண்டல இணை இயக்குனர் செல்வசேகர், கரூர் மாவட்ட கருவூல அலுவலர் ஜெயபிரகாஷ், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, கல்லூரி முதல்வர் டாக்டர் புனிதா, தாசில்தார் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story