திருக்குறுங்குடி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்


திருக்குறுங்குடி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2018 9:00 PM GMT (Updated: 21 Feb 2018 1:15 PM GMT)

திருக்குறுங்குடி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

ஏர்வாடி,

திருக்குறுங்குடி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகை போராட்டம்


நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே தளவாய்புரம்–ஆவரந்தலை இடையே நம்பியாற்றில் 5 கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் கடந்த நவம்பர் 30–ந் தேதி ஒகி புயலால் இடிந்தது. பாலம் கட்டுமான பணிகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாலும், முறைகேடுகள் நடந்ததாலும் பாலம் இடிந்ததாக ம.தி.மு.க.வினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து திருக்குறுங்குடி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை ம.தி.மு.க. சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

70 பேர் கைது

இந்த நிலையில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையில் திருக்குறுங்குடி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை அந்த கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட அவை தலைவர் ரைமண்ட், மதுரா, நாங்குநேரி ஒன்றிய செயலாளர் பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி துரை அழகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கல்லத்தியான், களக்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.சி.ராஜன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வகருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நகர செயலாளர் கசமுத்து, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் பெரும்படையார், மார்க்சிஸ்ட் வட்டார தலைவர் வக்கீல் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பு, ச.ம.க. நகர செயலாளர் செல்வகுமார், மதச்சார்பற்ற ஜனதாதள மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பெண்கள் உள்பட 77 பேரை ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Next Story