ஈரோட்டில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் போராட்டம்

ஈரோட்டில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மார்க்கமாக பல்வேறு வடமாநிலங்களுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதில் பெரும்பாலான ரெயில்களுக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்புவது வழக்கம். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் குறைவாக தண்ணீர் இருப்பதால் ஒருசில ரெயில்களுக்கு மட்டுமே தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடை பகுதிக்கு மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தது. அதைத்தொடர்ந்து 4.15 மணிக்கு ரெயில் புறப்பட்டது. அப்போது ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்கள். பின்னர் பயணிகள் நடைமேடை பகுதியில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (நேற்று) காலை 6.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது. திருநெல்வேலி வந்தபோது ஒருசில பெட்டிகளில் மட்டுமே தண்ணீர் இருந்தது. மதுரை வந்தபோது அனைத்து பெட்டிகளிலும் தண்ணீர் தீர்ந்து விட்டது.
இதனால் நாங்கள் இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அவர்கள் கரூர் ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்புவதாக தெரிவித்தனர். ஆனால் அங்கு தண்ணீர் நிரப்பவில்லை. அங்கு கேட்டதற்கு ஈரோட்டில் நிரப்புவதாக கூறினர்.
ஆனால் இங்கும் நிரப்பாமல் ரெயில் புறப்பட்டது. அதனால் நாங்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினோம். தண்ணீர் இல்லாத காரணத்தால் நாங்கள் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே இங்கு அனைத்து பெட்டிகளுக்கும் கண்டிப்பாக தண்ணீர் நிரப்பவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அதிகாரிகள், ‘தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளதால் ரெயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சேலம் ரெயில் நிலையத்தில் அனைத்து பெட்டிகளுக்கும் கண்டிப்பாக தண்ணீர் நிரப்பப்படும்.
எனவே நீங்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு ரெயிலில் ஏறுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பயணிகள் ரெயிலில் ஏறி அமர்ந்தனர். அதைத்தொடர்ந்து ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 5.15 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு சென்றது.

Related Tags :
Next Story