கூடுதல் கட்டணம் வசூலிப்பு: தனியார் டி.வி. நிறுவனத்துக்கு அபராதம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் வக்கீல் பிரம்மா. இவர் தனது வீட்டில் ரிலையன்ஸ் பிக் டிவி டிஸ் ஒலிபரப்புக்கு தனியார் ஏஜெண்டுகளிடம் பணம் கட்டினார்
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் வக்கீல் பிரம்மா. இவர் தனது வீட்டில் ரிலையன்ஸ் பிக் டிவி டிஸ் ஒலிபரப்புக்கு தனியார் ஏஜெண்டுகளிடம் பணம் கட்டினார்.
ஒரு வருடத்திற்கான சேவை கட்டணத்தையும் சேர்த்து ரூ.7 ஆயிரத்து 950 கட்டினார். ஆனால் 6 மாதத்திலேயே சேவை முடிந்துவிட்டது என்று அந்த நிறுவனம் ஒலிபரப்பை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரம்மா விசாரித்தபோது மற்றொரு நெட் ஒர்க்கை இவருக்கு மாற்றி வழங்கியபோது கூடுதல் பணம் வசூலித்து 6 மாதத்திலேயே சேவையை நிறுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரம்மா, நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி நாராயணசாமி, உறுப்பினர் சிவமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தி பிரம்மாவுக்கு இணைப்பு வழங்கிய கடை ஊழியர், ஏஜெண்டுகள் மற்றும் தனியார் டி.வி. நிறுவனம் ஆகியவை பிரம்மாவின் மனஉளைச்சல், வழக்குச்செலவு ஆகியவற்றை சேர்த்து ரூ.10 ஆயிரத்து 198 அபராதமாக வழங்க வேண்டும். அதை ஒரு மாதத்திற்குள் வழங்கவேண்டும். இல்லை எனில் 6 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story