தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
தேனி அருகே மூடப்பட்ட தனியார் நூற்பாலையை அரசே நடத்தக்கோரி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தேனி,
தேனி அருகே கோடாங்கிபட்டியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வந்தது. இந்த நூற்பாலையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. நூற்பாலை நிர்வாகத்தின் மீது கடன் கொடுத்த வங்கி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து நூற்பாலை சீல் வைக்கப்பட்டது. இதனால், இங்கு வேலை பார்த்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.இந்த நூற்பாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் தொழிலாளர்களும் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த நிலையில், வங்கி நிர்வாகம் சார்பில் இங்குள்ள எந்திரங்களை ஏலம் விட முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நூற்பாலை முன்பு நேற்று காலையில் குவிந்தனர். ஆலையை முற்றுகையிட்டு அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் வழங்க வேண்டும், வைப்பு நிதி, ஓய்வூதிய நிதி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும், கடன் சுமையால் மூடப்பட்ட தனியார் ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story