கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 23 Feb 2018 3:30 AM IST (Updated: 23 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் டிரைவருக்கு வலைவீச்சு

கபிஸ்தலம்,

கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கும்பகோணம்-திருவையாறு சாலையில் புத்தூர் கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தது. போலீசார் நிற்பதை பார்த்த அந்த லாரியின் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story