கட்டுமான அதிபர் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்
கட்டிடம் இடிந்து 18 பேர் பலியான வழக்கில் கட்டுமான அதிபர் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தானே,
இது தொடர்பாக போலீசார் அந்த கட்டிடத்தை கட்டிய கட்டுமான அதிபர் சரத்பாய் மான்சிங் பவார், கட்டிட வடிவமைப்பாளர் ஆனந்த் ஆஸ்தபுத்ரே உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தானே மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் ராமசாமி ராமன்னா என்பவர் இறந்து விட்டார். மற்ற 8 பேர் மீதான விசாரணை நடந்து வந்தது. விசாரணை நிறைவில் கட்டுமான அதிபர் சரத்பாய் மான்சிங் பவார், கட்டிட வடிவமைப்பாளர் ஆனந்த் ஆஸ்தபுத்ரே ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. மற்ற 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டவில்லை.இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றவாளிகள் சரத்பாய் மான்சிங் பவார், ஆனந்த் ஆஸ்தபுத்ரே ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story