கர்நாடக அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள உயர்வு அமல்
6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று கர்நாடக அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 16-ந் தேதி தொடங்கியது.
அன்றைய தினம் முதல்-மந்திரி சித்தராமையா 2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்தார். அப்பேது அவர் பேசியதாவது:-
“கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட 6-வது ஊதியக் குழு தனது அறிக்கையை வழங்கியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களின் ஊதியம் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரத்து 580 கோடி நிதிச் சுமை ஏற்படும். தலித் துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டங் களுக்கு பயன்படுத்தவில்லை.
நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மின்சார உற்பத்திக்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்கவில்லை. கர்நாடகத்தின் பொருளாதார நிலை நன்றாக உள்ளது. விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக அனைத்துக்கட்சி குழு பிரதமரை சந்தித்தது. அப்போது விவசாய கடன் தள்ளுபடி பற்றி பா.ஜனதா தலைவர்கள் வாயே திறக்கவில்லை.
அதனால் விவசாயிகளின் நலன் பற்றி பேச பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதற்கு எடியூரப்பா, எங்களிடம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரம் இல்லை என்று கூறினார். அத்தகைய கருத்தை கூறிய அவருக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு கூற தகுதி இல்லை.
பா.ஜனதா விவசாயிகள் விரோத கட்சி. நாங்கள் பொருளாதார ஒழுங்கை காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளோம். மொத்த மாநில உற்பத்தியில் கர்நாடகத்தின் கடன் 20.36 சதவீதமாக உள்ளது. ஆனால் மத்திய அரசின் கடன் 50.1 சதவீதமாக இருக்கிறது. கேரளாவின் கடன் 37.7 சதவீதமாகவும், உத்தரபிரதேசத்தின் கடன் 29.78 சதவீதமாகவும், ராஜஸ்தானின் கடன் 32.76 சதவீதமாகவும் உள்ளது.
மக்களின் ஆசிர்வாதத்தால் தேவராஜ் அர்சுக்கு பிறகு முதல்-மந்திரியாக 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தை முழுமையாக நான் நிறைவு செய்கிறேன். இது எனக்கு மிகுந்த திருப்தியை தருகிறது. ஆனால் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3 பேர் முதல்-மந்திரியாக பணியாற்றினர். முன்னாள் முதல்-மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டேவுக்கு பிறகு நான் இதுவரை 13 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளேன்.
நான் தாக்கல் செய்த பட்ஜெட் பற்றி 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இங்கே பேசினர். சிலர் பாராட்டினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறை கூறினர். பாராட்டு, விமர்சனம் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இது 14-வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் ஆகும். நாம் மீண்டும் புதிய சட்டசபையில் நேருக்கு நேர் சந்திப்போம்.
5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த ஆதரவு வழங்கிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 14-வது சட்டசபையில் உறுப்பினர்களாக உள்ள நீங்கள் அனைவரும் மீண்டும் உங்கள் கட்சிகளில் டிக்கெட் பெற்று வெற்றி பெற்று 15-வது சட்டசபைக்கு வாருங்கள் என்று வாழ்த்துகிறேன். கர்நாடகத்தில் மக்கள் முடிவின்படி காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். பா.ஜனதாவினர் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமருவார்கள்.”
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Tags :
Next Story