நாகர்கோவில் அருகே லாரி–கார் மோதல்; பெண் உள்பட 3 பேர் காயம்


நாகர்கோவில் அருகே லாரி–கார் மோதல்; பெண் உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Feb 2018 10:45 PM GMT (Updated: 24 Feb 2018 5:45 PM GMT)

கேரள மாநிலம் மூணாறில் இருந்து ஒரு பெண் உள்பட 3 பேர் நேற்று நாகர்கோவிலுக்கு காரில் வந்தனர். நெல்லை மார்க்கமாக சென்ற ஒரு லாரி மீது கார் மோதியது. இதில் காரில் இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர்.

நாகர்கோவில்,

கேரள மாநிலம் மூணாறில் இருந்து ஒரு பெண் உள்பட 3 பேர் நேற்று நாகர்கோவிலுக்கு காரில் வந்தனர். அவர்கள் தேரேகால்புதூர் வந்தபோது எதிர்பாராத விதமாக நெல்லை மார்க்கமாக சென்ற ஒரு லாரி மீது கார் மோதியது. இதில் காரில் இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story