மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் ஆசாத் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர் அஜய் கோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பேரணியின் போது, தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story