அரியலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருமானூர்,
அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் லிங்கதடிமேடு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உருவப்படத்துக்கு, கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நகர கழகத்தின் சார்பில் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் மங்காயி பிள்ளையார் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரியலூர் பெருமாள் கோவிலில் சமபந்தி நடைபெற்றது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, எம்.ஜி.ஆர். மன்ற மகா பாரி வள்ளல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமானூரில், அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் தொகுதி கழக செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சாமிநாதன், ஒன்றிய துணை செயலாளர் மணிவேல், கோவிலூர் ஊராட்சி கழக செயலாளர் ரமேஷ், விழுப்பனங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி கருப்பையன், பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் அய்யாக்கண்ணு என்கிற கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கீழப்பழுவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வரதராசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் அரிசந்திரன் ஆகியோர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
பனங்கூரில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில், இளைஞர் பாசறையை சேர்ந்த ஜெகதீசன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திருமானூரில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. திருமானூர் கைலாசநாதர் கோவில், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செந்துறை பஸ் நிலையம் அருகில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் டி.டி.வி. தினகரன் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story