அடுத்த மாதம் 1-ந்தேதி பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு தொடக்கம்
அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு தொடங்குகிறது. இதையொட்டி சிவமொக்கா மாவட்டத்தில் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் லோகேஷ் தெரிவித்தார்.
சிவமொக்கா,
கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டுக்கான தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடக்கிறது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இந்த நிலையில், பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு குறித்து நேற்று சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லோகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கல்வித்துறை துணை இயக்குனர் கங்காதரப்பா, கூடுதல் கலெக்டர் சன்னபசப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் முடிந்ததும் கலெக்டர் லோகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு வருகிற 1-ந்தேதி மாநிலம் முழுவதும் தொடங்குகிறது. இந்த தேர்வுக்காக சிவமொக்கா மாவட்டத்தில் 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சிவமொக்கா தாலுகாவில் 12, பத்ராவதி தாலுகாவில் 6, சாகர் தாலுகாவில் 5, தீர்த்தஹள்ளி, சிகாரிபுரா தாலுகாக்களில் தலா 3, ஒசநகர், சொரப் தாலுகாக்களில் தலா 2 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா மாவட்டத்தில் 19,187 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 8,376 பேர் மாணவர்களும், 10,811 பேர் மாணவிகளும் ஆவார்கள்.
இந்த தேர்வில் முறைகேடு நடக்காத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வினாத்தாள் அரசு கருவூலத்தில் இருந்து மாணவர்களின் கைகளுக்கு சென்றடையும் வரை வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. இந்த வீடியோ பதிவுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்வு நடக்கும் மையங்களுக்கு சென்று திடீர் சோதனை நடத்துவார்கள். தேர்வு மையத்துக்கு செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் மட்டுமல்லாது கண்காணிப்பாளர்களும் எலெக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது.
தேர்வு நடக்கும் நேரங்களில் மையத்தை சுற்றி சுமார் 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story