மாவட்ட செய்திகள்

கும்பகோணத்தில் காய்ந்த நெற்பயிருடன் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Hindu People's Party demonstrated with the dried paddy in Kumbakonam

கும்பகோணத்தில் காய்ந்த நெற்பயிருடன் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் காய்ந்த நெற்பயிருடன் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில், காய்ந்த நெற்பயிருடன் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கும்பகோணம்,

கும்பகோணத்தில், இந்து மக்கள் கட்சியினர் காந்தி பூங்கா முன்பு காய்ந்த நெற்பயிருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட தலைவர் ராஜ்குமார் வரவேற்று பேசினார்.


நகர பொதுச்செயலாளர் பாலாஜி, கும்பகோணம் ஒன்றிய தலைவர் கணேஷ்குமார் நகர தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி கோரிக்கைகள் குறித்து பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் உள்ளூர் நதிநீர் இணைப்பு திட்டங்களை உடனே நிறைவேற்றிட வேண்டும். நதிநீர் இணைப்பு திட்டங்களை போர்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும். மத்திய அரசு நதிநீர் இணைப்புத் திட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் குழுக்கள் அமைத்து நதிநீர் இணைப்புத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.