மாவட்ட செய்திகள்

ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Marxist Communist Party Demonstration

ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டு ஊர்வலத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊத்தங்கரை வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயராமன் கலந்துகொண்டு பேசினார். இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.