ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Feb 2018 3:00 AM IST (Updated: 26 Feb 2018 10:56 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் வடக்கு மாவட்டம் கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோலியனூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

விழாவிற்கு கோலியனூர் ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் எம்.பி., முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பிரேமாமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு தையல் எந்திரங்கள், சலவை பெட்டிகள், கியாஸ் அடுப்புகள், குக்கர்கள், வேட்டி-சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்கள் ஆயிரம் பேருக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயா, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, கிளை செயலாளர்கள் ராமசாமி, சிவக்குமார், உதயசூரியன், ஒன்றிய துணை செயலாளர்கள் சீத்தாகலியபெருமாள், பவானி தமிழ்மணி, இலக்கிய அணி செயலாளர் கலியமூர்த்தி, இளைஞரணி செயலாளர் சேட்டு பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி ஜனார்த்தனன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமிராமசாமி, மாணவர் அணி துணைத்தலைவர் பிரபாகரன், வளவனூர் பேரூராட்சி செயலாளர் சங்கரலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story