திருச்செங்கோடு, எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செங்கோடு, எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:15 AM IST (Updated: 27 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எலச்சிபாளையம்,

எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியகுழு உறுப்பினர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். தூத்துகுடி மாவட்டத்தில் கட்சியின் மாநில மாநாட்டு ஊர்வலத்தில் தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரா மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுந்தரம் சுரேஷ், செந்தில்குமார், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர ஒன்றியகுழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ராயப்பன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நகரக்குழு உறுப்பினர்கள் நடேசன், ஸ்ரீனிவாசன், செந்தில், சுப்பிரமணி, தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகரக்குழு சிவானந்தம் நன்றி கூறினார்.


Next Story