காட்டு பன்றிகளை பிடிக்க வைத்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
சூளகிரி அருகே காட்டு பன்றிகளை பிடிக்க வைத்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேடுபள்ளிகாடு கிராமத்தை சேர்ந்தவர் குட்டியப்பா. இவரது மகன் சிவராஜ் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா (25). இவர்களுக்கு திரிஷா (7), சுனில்குமார் (3), சுபாஸ்ஸ்ரீ (1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை, சிவராஜ் உள்ளிட்ட சிலர் மின்வேலி அமைத்து பிடித்து வருவதை வழக்கமாக கொண்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு மேடுபள்ளிகாடு பகுதியில் உள்ள விளைநிலத்தில் சிவராஜ் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், சிவராஜ் உள்ளிட்ட 6 பேர், வனத்தை ஓட்டி காட்டு பன்றிகளை பிடிக்க மின்வேலி அமைத்ததும், இதில், எதிர்பாராதவிதமாக சிவராஜ் தவறி விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதையறிந்து அவருடன் சென்ற 5 பேர் அங்கிருந்த மின்வேலி உள்ளிட்ட தடயங்களை அகற்றி விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story