அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்–மனைவி பலி போலீசார் விசாரணை
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்–மனைவி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாவக்கோன்பட்டியை சேர்ந்தவர் மூக்கன்(வயது 35). இவரது மனைவி ரதிக்கண்ணு(30). கணவன், மனைவி 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நாவக்கோன்பட்டியில் இருந்து ராமக்கவுண்டம்பட்டியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். பின்னர் அங்கு சாமியை கும்பிட்டு விட்டு, அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். விராலிமலை அருகே திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிள் கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
கணவன்–மனைவி பலி
இதில் மோட்டார் சைக்கிள் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த மூக்கன், ரதிக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூக்கன், ரதிக்கண்ணு பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story