முதன்மை கண்காணிப்பாளரை தவிர எவரும் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை
முதன்மை கண்காணிப்பாளரை தவிர வேறு எவரும் தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி கூறினார்.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வும், மார்ச் மாதம் 6-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 27 ஆயிரத்து 257 பேரும், பிளஸ்-1 தேர்வை 23 ஆயிரத்து 261 பேரும் எழுத உள்ளனர்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 83 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர 83 முதன்மை கண்காணிப்பாளர்கள், 220 பறக்கும் படை அலுவலர்கள், 19 வழித்தட அலுவலர்கள், 83 துறை அலுவலர்கள், கட்டுக்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வு தொடங்குவதற்கு முன்பு காலை 9.45 மணிக்கு வினாத்தாளை பிரித்து வரிசைப்படுத்தி அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வினியோகம் செய்ய வேண்டும்.
அவற்றை பெற்றுக் கொண்டவுடன், மாணவர்கள் தங்களது பதிவு எண்ணை எழுத வேண்டும். பின்னர், 10 நிமிடம் வினாக்களை படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். தேர்வு குறித்து பதட்டம் இல்லாமல் இருப்பதற்காக, இந்த 10 நிமிடம் வழங்கப்படுகிறது. அதை மாணவர்களுக்கு சத்தம் இல்லாமல் மெதுவாக கூறவேண்டும். பிறகு, விடைத்தாளை வழங்க வேண்டும். அப்போது, நான் சொல்லும் வரை யாரும் எழுதக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
காலை 10.15 மணிக்கு ‘பெல்’ அடித்ததும், மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். பின்னர் தேர்வில் பங்கேற்காதவர்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக, முதன்மை கண்காணிப்பாளரை தவிர வேறு எவரும் செல்போன் எடுத்துவர அனுமதிக்க கூடாது. அவ்வாறு எடுத்து வருபவர்களை கண்டுபிடித்தால், எச்சரிக்கை செய்து, செல்போனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் அருளரங்கன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story