தொழில்அதிபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி: போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
மத்திய அரசின் திட்டங்களை கூறி தொழில்அதிபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
கடந்த 2003-ம் ஆண்டு சேலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலராக பணியாற்றிய சரஸ்வதி என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் சேலம் அழகாபுரத்தை சேர்ந்த விஜயகுமார்(வயது 49) என்பவர் மண்டல வளர்கல்வி வாரியம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், அரசு அதிகாரி போல் வாகனத்தில் சிவப்பு சுழல்விளக்கு பொருத்திக்கொண்டு சுற்றி வருகிறார். மேலும் அவர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்கள் பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருவதாக கூறி இருந்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் மற்றும் அவருடைய தம்பி பரணிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் விஜயகுமார் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சேலம் கோர்ட்டு கடந்த 2004-ம் ஆண்டு உத்தரவிட்டது. தலைமறைவான அவரை விரைவில் பிடிக்க தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இதனிடையே விஜயகுமார் ஐ,ஏ.எஸ். அதிகாரியாக நடித்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மீண்டும் பலரிடம் மோசடி செய்து வருவதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில் 13 ஆண்டுகளுக்கு பின், சேலம் மாமாங்கம் அருகே உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்த விஜயகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வேலன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கடந்த 2001-ம் ஆண்டு மண்டல வளர்கல்வி வாரியத்தின் தலைவர் என விஜயகுமார் கூறிக்கொண்டு சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் வலம் வந்தார். இவர் ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் சென்று வளர்கல்வி ஒப்பந்தம் மாநில அரசால் கொண்டு வரப்பட்டுள்ளதால் இதை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை ஏமாற்றினார். நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அதிகாரிகளை அவர் ஏமாற்றி வந்தார்.
இதற்கிடையில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த அவர் தலைமறைவானார். அதைத்தொடர்ந்து விஜயகுமார் தன்னை பிரதமர் அலுவலக திட்ட அமலாக்க குழு சேர்மன் என கூறிக்கொண்டு மாவட்டம் வாரியாக சென்று சிறு, குறு தொழில் நிறுவன அதிபர்கள், உற்பத்தி திறன் குழு நிர்வாகிகள் பலரை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை ரூ.800 கோடியில் செயல்படுத்த உள்ளோம். இதன் மூலம் கமிஷன் தொகை உங்களுடைய நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்று கூறி அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் முன்பணமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேலம் வந்த விஜயகுமார், ரூ.2 லட்சம் செலவில் மத்திய அரசின் சார்பில் மருந்தகம் வைப்பதாக சிறு, குறு தொழில் நிறுவன சங்கத்தினரை அழைத்து பேசி உள்ளார். மேலும் மத்திய அரசின் பெயரை கூறி மோசடியில் ஈடுபட்ட விஜயகுமார் சேலத்தில் மாவட்ட உற்பத்தி திறன் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 2 பேரை தனி அதிகாரிகள் எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டதுடன், தனக்கு பாதுகாவலராக போலீஸ் சீருடையில் 8 பேரை அழைத்து வந்துள்ளார்.
போலீசாராக நடிக்க அவர்களுக்கு தினமும் ரூ.600 கூலியாக வழங்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முனியாண்டி என்பவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி விஜயகுமார் ரூ.5 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து உள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தற்போது வசமாக சிக்கிக்கொண்டு கைதான விஜயகுமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story