பெருந்துறை தி.மு.க. மண்டல மாநாட்டில் தொண்டர் அணியை சேர்ந்த 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்


பெருந்துறை தி.மு.க. மண்டல மாநாட்டில் தொண்டர் அணியை சேர்ந்த 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்
x
தினத்தந்தி 27 Feb 2018 3:30 AM IST (Updated: 27 Feb 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை தி.மு.க. மண்டல மாநாட்டில் தொண்டர் அணியை சேர்ந்த 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பெருந்துறை,

பெருந்துறையில் தி.மு.க. சார்பில் மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி வருகிற (அடுத்த மாதம்) 24 மற்றும் 25-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மண்டல மாநாடு நடக்க உள்ளது.

இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த தொண்டர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று மாநாடு நடைபெறும் திடலில் நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மாநாட்டு வரவேற்பு குழு தலைவருமான சு.முத்துச்சாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தொண்டரணி மாநில அமைப்பாளர் நாகை முருகன், ஆவின் ஆறுமுகம், சேலம் கோமான் ஆகியோர் தொண்டர் அணியினருக்கு மாநாட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

மேலும் மாநாட்டில் முதன்மை பாதுகாப்பில் தொண்டரணியினர் 1,500 பேர் ஈடுபடுவார்கள் என அறிவித்தனர்.

தி.மு.க கொள்கை பரப்பு இணைசெயலாளர் சந்திரகுமார், மாநில நெசவாளரணி செயலாளர் சச்சிதானந்தம், மாநகர செயலாளர் மு.சுப்பிரமணி, மாவட்ட துணைச்செயலாளர் சின்னையன், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சுள்ளான் ராஜேந்திரன், துணை அமைப்பாளர் ரமேஷ், பெருந்துறை ஒன்றிய அமைப்பாளர் ஆனந்த், சென்னிமலை ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். முன்னதாக அனைவரையும் பெருந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி வரவேற்று பேசினார்.

Next Story