நாகர்கோவிலில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், போதகர் கிதியோனை கொலை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டா நிலத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டவும், வழிபாடுகள், ஜெபக்கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும், கன்னியாகுமரி கோவளம்– கீழமணக்குடி இடையே அமைய உள்ள சரக்குப்பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு பேரவை தலைவர் ஏசுராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜோஸ், இந்திராகுமார், மேஜர் மோட்சக்கண் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Tags :
Next Story