கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடங்குகிறது
பெரம்பலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடங்குகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய். இந்த நோய்களுக்கான தடுப்பூசி பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரம் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு போடப்பட உள்ளது. கோமாரி நோய் உண்டாக்கும் வைரஸ் கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும், புண்கள் ஏற்படும். அவைகள் தீவனம் உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்து விடும்.
வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூச்சிரைக்கும். பால் கறவை மிகவும் குறையும். நோயுற்ற கால்நடைகள் உற்பத்தி குறைவதுடன் சினை பிடிப்பதும் வெகுவாக பாதிக்கும். கறவை மாடுகளில் பால் குடித்து வரும் இளம் கன்றுகள் நோய்தாக்கி இறக்கவும் நேரிடும்.
எனவே இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப்பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். எனவே பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையினரால் கால் மற்றும் வாய்நோய் தடுப்புத்திட்டம் 14-வது சுற்றின் கீழ் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதிவரை மேற்கண்ட நோய்க்கான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
ஆதலால் கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும் போது 4 மாத வயதுள்ள கன்று முதல் சினை மற்றும் கறவை மாடுகள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story