பழனி அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பழனி அருகே தொப்பம் பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
பழனி,
பழனி அருகே தொப்பம் பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் குமாரபாளை யம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு கடந்த சில தினங்களாக குடிநீர் வினி யோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இத னால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை யில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார் கள்.
காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 1 மணி வரை நடை பெற்றது. இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத் துக்கு சென்று போராட் டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்ற னர்.
இந்த பிரச்சினை குறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப் பாடு நிலவி வருகிறது. இத னால் நாங்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம்.
எங்கள் கிராமத்தில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிலும் தண்ணீர் வருவதில்லை. இக்கிராமத் திற்கு அருகே உள்ள மிடாப்ப ாடி ஊராட்சிக்கு அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. எங்க ளுக்கும் இதேபோல் அமரா வதி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு வரவேண்டும். மேலும் எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. எங்கள் கிராம மக்களை 100 நாள் வேலைக்கு அனுமதிப்ப தில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம், என்றனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரி கூறுகையில், பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்யவும் தெரு விளக்குகளை உடனடியாக சீரமைக்கவும், கிராம மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது, என்று தெரி வித்தார்.

Related Tags :
Next Story