“ஏரி, குளங்கள் தூர்வார நிதி தருகிறோம்” குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார நிதி தருகிறோம் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கூறினர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் மிருணாளினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோகரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயத்தை காப்பாற்ற மழைநீரை சேமித்து வைக்க ஏரிகள் மற்றும் குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். இதைப்போல கல்லணையில் இருந்து நாகுடி வாய்க்காலின் கடைமடை பகுதியான மும்பாலை வரை உள்ள கிளை வாய்க்கால்கள், மண்தட்டிய இடங்கள் மற்றும் அதே பகுதியில் உள்ள ஏரிகள் போன்றவற்றை தூர்வார வேண்டும், என்றார்.
விவசாயி தனபதி, புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு வறட்சியின் போது கிராமங்கள் தோறும் குடிநீர் தொட்டிகள் அமைத்து, கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதைப்போல இந்த ஆண்டும் கிராமங்களில் கடந்த ஆண்டு கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியை சீரமைத்து கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தற்போது குளங்களில் தண்ணீர் இல்லாததால், குளத்தில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு தரமான பால் கிடைப்பதற்காக கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். எனறார்.
விவசாயி செல்லத்துரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த நேரத்தில் விவசாயத்திற்கு மின்சாரம் கிடைக்கும், எந்த நேரத்தில் கிடைக்காது என்பதை மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். சோளம், கடலை போன்ற பயிர்களுக்கும் பயிர் காப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். என்றார்.
விவசாயி சொக்கலிங்கம், அறந்தாங்கி ஒன்றியம் பூதக்குடி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் தைலமரங்கள் உள்ளன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவனத்தான்கோட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக்கடன்களுக்கு வட்டியை குறைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். என்றார்.
விவசாயி மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மழையளவு குறித்த புள்ளி விபரங்களை சரியான முறையில் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்ப வேண்டும். தைலமரங்களை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் போன்றவற்றை தூர்வார நாங்கள் (விவசாயிகள்)நிதி தருகிறோம். என்றார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் கணேஷ் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைப்படும் என கூறினார்.

Related Tags :
Next Story