விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தாக்குதல் ஏற்படாத வண்ணம் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது.
விழுப்புரம் காகுப்பத்தில் நடந்த முகாமில் கலெக்டர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கால்நடைகளை கால் மற்றும் வாய் நோய் தாக்கக்கூடியது. இந்நோய் தாக்குதலால் கறவை மாடுகளின் பால் வற்றி உழவு மாடுகளின் வேலைத்திறன் குறைந்து கன்றுகள் இறப்பு ஏற்பட்டு கறவை மாடுகளின் சினை பிடிக்கும் சதவீதம் குறைந்து விட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
எனவே இந்நோய் கால்நடைகளுக்கு ஏற்படாத வண்ணம் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 126 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 6¾ லட்சம் கால்நடைகளுக்கு இந்த கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. ஆகவே விவசாயிகள் தங்களது பகுதியில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு தங்களது கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் குருவையா, தாசில்தார் சுந்தர்ராஜன் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story