நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கார்த்தி சிதம்பரத்தை நேற்று முன்தினம் சி.பி.ஐ. திடீரென கைது செய்தது. இந்த கைது சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்,
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை நேற்று முன்தினம் சி.பி.ஐ. திடீரென கைது செய்தது. இந்த கைது சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வீரப்பன், சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் மணிகோபால், மகளிர் அணி ராணி, மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம் மற்றும் வட்டார தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக நிரவ்மோடி மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நாமக்கல் நகர தலைவர் மோகன் நன்றி கூறினார்.