மதுரையில் இருந்து கோவைக்கு மீட்டர்கேஜ் பாதையில் ஓடிய ரெயில்களை மீண்டும் இயக்கும் திட்டம் இல்லை
மதுரையில் இருந்து கோவை, பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கிய ரெயில்களை மீண்டும் இயக்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை,
மதுரை ரெயில்வே கோட்டத்தில் திண்டுக்கல்-பொள்ளாச்சி-போத்தனூர் இடையே மீட்டர்கேஜ் ரெயில்பாதை இருந்தபோது கீழ்க்கண்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
* மதுரையில் இருந்து போத்தனூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.6708) ஞாயிற்றுக்கிழமை தவிர தினசரி காலை 6.45 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு காலை 9.15 மணிக்கு சென்றடைந்தது. போத்தனூருக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைந்தது.
* பாசஞ்சர் ரெயில் (வ.எண்.776) மதுரையில் இருந்து போத்தனூர், பாலக்காடுக்கு இயக்கப்பட்டது. அந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 11.45 மணிக்கு சென்றடைந்தது. மதியம் 2 மணிக்கு பாலக்காடு சென்றடைந்தது. அதேபோல, பொள்ளாச்சியில் இருந்து (வ.எண்.776-ஏ) மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் சென்றது.
* மதுரையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு ஒரு பாசஞ்சர் ரெயில் (வ.எண்.768) புறப்பட்டு மாலை 6 மணிக்கு பொள்ளாச்சி சென்றடைந்தது. இரவு 8 மணிக்கு பாலக்காடு சென்றது.
இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து காலை புறப்படும். பாலக்காட்டில் இருந்து மங்களூரு, குருவாயூர், திருச்சூர், திருவனந்தபுரத்துக்கு இணைப்பு ரெயில்கள் இருந்தன.
* மதுரையில் இருந்து மதியம் 2.40 மணிக்கு ஒரு பாசஞ்சர் ரெயில் (வ.எண்.778) புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு போத்தனூர்(கோவை) சென்றடைந்தது.
*மதுரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு ஒரு பாசஞ்சர் ரெயில் (வ.எண்.764) புறப்பட்டு அதிகாலை 3.55 மணிக்கு பாலக்காடு ரெயில்நிலையம் சென்றடைந்தது. இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டது.
* மதுரையில் இருந்து இரவு 10.50 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.6716) புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு போத்தனூர்(கோவை) ரெயில் நிலையம் சென்றடைந்தது.
* மறுமார்க்கத்திலும் மதுரைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதுதவிர, திண்டுக்கல்-போத்தனூருக்கு இடையேயும் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டன
இந்த நிலையில் அகல ரெயில்பாதை பணிக்காக அந்த பாதையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து தற்போது இந்த பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தற்போது அகல ரெயில்பாதையில் மதுரையில் இருந்து பழனிக்கு இரு மார்க்கங்களிலும் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56710,56709 ) இயக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து மதுரை வழியாக பாலக்காடு டவுனுக்கு தினசரி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56769,56770) இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரத்துக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16344,16343) இயக்கப்படுகிறது. அத்துடன், பழனியில் இருந்து போத்தனூர் வழியாக கோவைக்கு சிறப்பு ரெயில் (வ.எண்.06710,06709) இயக்கப் படுகிறது.
ஆனால், அகலரெயில்பாதையாக மாற்றப்பட்ட பிறகு மதுரையில் இருந்து கோவை, பாலக்காடுக்கு மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட எந்த ரெயிலும் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது.
இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்கப்பட்டதற்கு மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் அளித்த பதிலில், மதுரையில் இருந்து கோவை, பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரெயில்கள் எதுவும் இயக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தனத்தால் மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய ரெயில்கள் அகல ரெயில்பாதையில் மீண்டும் இயக்கப்படாமல் இருப்பது பயணிகளிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story