விழுப்புரம் அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு


விழுப்புரம் அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 4 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 11 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே வளவனூர் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் ரமணதாஸ் (வயது 50). இவர் சென்னையில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமியும், மகன் பிரசாந்தும் வளவனூரில் வசித்து வருகின்றனர். அவ்வப்போது விடுமுறையில் மட்டும் ரமணதாஸ் விழுப்புரம் வந்து செல்வார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமணதாசும், அவரது மனைவியும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக விழுப்புரத்திற்கு வந்தனர். பின்னர் அவர்களது மகன் பிரசாந்த், வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார்.


இதனிடையே விழுப்புரத்தில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருவரும் தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 11 பவுன் நகை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். 3 பேரும் வெளியில் சென்றிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பட்டப்பகலிலேயே வீடு புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story