வீட்டின் ஓட்டை பிரித்து மடிக்கணினி- நகை திருட்டு
வீட்டின் ஓட்டை பிரித்து மடிக்கணினி- நகை திருட்டு. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த அரை பவுன் மோதிரம் மற்றும் மடிக்கணினியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகேஷ்வரி (வயது 45). பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகேஷ்வரி சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றார். பின்னர் குளித்து விட்டு வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஓடு பிரிந்து கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த அரை பவுன் மோதிரம் மற்றும் மடிக்கணினியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மகேஷ்வரி மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story