மரம் வெட்டும் தொழிலாளி மர்மசாவு மாமனார்-மாமியாரிடம் போலீசார் விசாரணை
கறம்பக்குடி அருகே மரம் வெட்டும் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது மாமனார்-மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வாழை குட்டையான் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (37). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி கனகா. இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட் களுக்கு முன்பு கனகா தனது சித்தி ஊரான பின்னையூர் கிராமத்திற்கு தனது குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றார். இந்நிலையில் நேற்று சண்முகத்தின் நண்பர் அவரை வேலைக்கு அழைத்து செல்ல அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டிற்கு உள்ளே சேலையில் தூக்கு மாட்டியவாறும் பின் பக்கம் 2 கைகளும் கட்டப்பட்ட நிலையிலும் சண்முகம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு, இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. பின்னர் மோப்ப நாய் சண்முகத்தின் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு, ஓடி சென்று அருகில் உள்ள சண்முகத்தின் மாமனார் செல்லத்துரை வீட்டில் சென்று படுத்துக்கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர் வரழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சண்முகத்தின் அண்ணன் சுப்பிரமணியன் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் தனது தம்பியின் சாவில் மர்மம் உள்ளது என கூறி புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சண்முகத்தின் மாமனார் செல்லத்துரை, மாமியார் செல்வி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story