குப்பநத்தம் அணை தண்ணீர் கரியமங்கலம் ஏரிக்கு வராததால் விவசாயிகள் ‘திடீர்’ முற்றுகை
குப்பநத்தம் அணை தண்ணீர் கரியமங்கலம் ஏரிக்கு வராததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
செங்கம்,
செங்கத்தை அடுத்த குப்பநத்தம் அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணையில் இருந்து செல்லும் தண்ணீர் செங்கம் காயம்பட்டு ஏரிக்கு சென்று, அது நிரம்பிய பின் நீர் வழித்தடங்களின் வழியாக செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஏரிக்கு செல்லும். ஆனால் பல ஆண்டுகளாக கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீர் செல்வதில்லை.
இதனால் கரியமங்கலம் பகுதியில் முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பல முறை விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது செங்கம் ஏரி நிரம்பியும், கரியமங்கலம் ஏரிக்கு நீர் வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், தி.மு.க. எம்.எல்.ஏ. மு.பெ.கிரி தலைமையில் செங்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை (நீர்வள ஆதார அமைப்பு) திடீரென முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், 2 நாட்களில் கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படும் என எம்.எல்.ஏ. கிரி மற்றும் கரியமங்கலம் விவசாயிகளிடம் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story