பழனி வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அதிகாரி தகவல்
வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க பழனி வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனச்சரகர் கணேஷ்ராம் தெரிவித்தார்.
பழனி,
பழனி வனப்பகுதி 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு யானை, கடமான், சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. பழனி வனப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயத்துடன் பழனி வனச்சரகம் இணைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பழனி வனச்சரகர் கணேஷ்ராம் தலைமையில் வனப் பாதுகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பழனியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகின்றன.
இதையடுத்து தண்ணீர், உணவுக்காக வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டும் பழனி வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பழனி வனச்சரகரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பழனி வனப்பகுதியில் ஆண்டிப்பட்டி, தேக்கந்தோட்டம், ஓடக்காடு மற்றும் பிற பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வனப்பகுதியின் எல்லைப்பகுதியிலும் ஏற்கனவே தடுப்பு அணை போன்று தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story