சென்னையை விட கோவை மாநகராட்சியில் தொழில் வரி அதிகம்


சென்னையை விட கோவை மாநகராட்சியில் தொழில் வரி அதிகம்
x
தினத்தந்தி 5 March 2018 4:30 AM IST (Updated: 5 March 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை விட கோவை மாநகராட்சியில் தொழில் வரி அதிகமாக உள்ளது.

கோவை,

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் நிறுவனங்களே பிடித்தம் செய்து மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்துகின்றன. தொழில்வரியை ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து மாநகராட் சிக்கு செலுத்த வேண்டியது தனியார் நிறுவனங்களின் கடமை ஆகும். இல்லா விட்டால் ஊழியர்களின் தொழில்வரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே செலுத்த நேரிடும்.

கோவையில் தொழில்வரி அதிகபட்சமாக ரூ.975-ம், தனி நபர் மற்றும் பணியாளர்களுக்கு அவர் களின் அரையாண்டு வருமானத்திற்கு ஏற்றவாறு குறைந்தபட்சமாக ரூ.98-ம் அதிகபட்சமாக ரூ.975-ம் அரையாண்டு தொழில்வரி தொகை செலுத்தப்பட வேண்டும். தொழில்வரி ஒவ்வொரு அரையாண்டிற்கும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் செலுத்தப்பட வேண்டும்.

ஆனால் சென்னை மாநகராட்சியை விட கோவை மாநகராட்சியில் தொழில் வரி அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

சராசரியாக அரையாண்டு மொத்த வருமானம் ரூ.21 ஆயிரம் வரை இருந்தால் கோவை மற்றும் சென்னை மாநகராட்சியில் தொழில் வரி கிடையாது. ஆனால் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் இருந்தால் கோவை மாநகராட்சியில் தொழில் வரி ரூ.127-ம், சென்னை மாநகராட்சியில் ரூ.100-ம் வசூலிக்கப்படுகிறது.

Next Story