குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
திருச்சிற்றம்பலம் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
திருச்சிற்றம்பலம்,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது செருவாவிடுதி தெற்கு ஊராட்சி. இங்கு தொடக்கப்பள்ளி அருகே 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இது பழுதடைந்து இருப்பதால் கடந்த ஒரு ஆண்டாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி செருவாவிடுதி தெற்கு ஊராட்சி பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி நேற்று செருவாவிடுதியில் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கடைவீதியில் கருப்புக்கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி ஒன்றிய ஆணையர் குமாரவடிவேல், பட்டுக்கோட்டை தாசில்தார் (பொறுப்பு) ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன், ஜனார்த்தனம் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடைபெற்ற செருவாவிடுதிக்கு சென்று கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வாரத்துக்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Tags :
Next Story