வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக புகார்
கூவம் ஆற்றில் பெண் பிணமாக கிடந்த சம்பவம்: வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை,
கிண்டி-சைதாப்பேட்டை ரெயில்நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலத்தின் கீழே கூவம் ஆற்றில் கடந்த சனிக்கிழமை பெண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் அளித்த தகவலையடுத்து தீயணைப்பு படையினர் பிணத்தை மீட்டனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ரோஸ் என்பவரது மனைவி ஜீவிதா (வயது 25) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில், தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயிலில் வந்த ஜீவிதா கிண்டி-சைதாப்பேட்டை இடையே கூவம் ஆற்றில் உள்ள ரெயில்வே பாலத்தை கடக்கும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதற்கிடையே ஜீவிதாவின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Related Tags :
Next Story