நிலத்தகராறில் 3 சிறுமிகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி போலீஸ் விசாரணை
வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் 3 சிறுமிகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற உறவினர்கள் 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்,
வாணியம்பாடி அருகே உள்ள சொரக்காயல் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 47), விவசாயி. இவரது மனைவி அமிர்தவள்ளி (40). இவர்களுக்கு பொருட்செல்வி (12), அஸ்வினி (10) மற்றும் காவியா (7) என 3 மகள்கள் உள்ளனர்.
நாட்டறம்பள்ளி அருகே உள்ள அரசுப்பள்ளியில் பொருட்செல்வி 8-ம் வகுப்பும், அதே பள்ளியில் அஸ்வினி 5-ம் வகுப்பும், காவியா 2-ம் வகுப்பும் படிக்கின்றனர்.
இந்த நிலையில் ஜெயக்குமாருக்கும், அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பி ராமச்சந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் அண்ணன், தம்பிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயக்குமாரும், அவரது மனைவி அமிர்தவள்ளியும் தாக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கணவன்-மனைவி இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால், அவர்களது 3 மகள்களும் வீட்டில் தனியாக இருந்தனர். இதனால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் முதல் உதவி சிகிச்சை மட்டும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். அப்போது, 3 மகள்களும் வீட்டில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அவர்களது வாயில் நுரை தள்ளியிருந்தது. சிறுமிகள் அருகில், சாப்பாடு தட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜெயக்குமார், அந்த சாப்பாட்டை கொஞ்சம் எடுத்து கோழிக்கு போட்டு பார்த்தார். சாப்பாட்டை கொத்தி சாப்பிட்ட கோழி சிறிது நேரத்தில் இறந்து போனது.
அதன்பிறகே, தன்னுடைய 3 மகள்களுக்கும் சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சி நடந்து இருப்பதை அறிந்து அவர் கதறி துடித்தார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 சிறுமிகளும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமிகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிலத்தகராறில் கணவன்-மனைவியை தாக்கிய உறவினர்களே, 3 சிறுமிகளுக்கும் விஷம் கொடுத்ததும், பெண்கள் உள்பட 6 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story