மனைவி- குழந்தையை பார்க்க வந்த தொழிலாளி தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
சுசீந்திரம் அருகே தாய் வீட்டில் தங்கியிருந்த மனைவி- குழந்தையை பார்க்க வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜன் (வயது 28). கோவையில் ஒரு நூல் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் குமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்துள்ள பள்ளம், லூர்துகாலனியை சேர்ந்த ஆரோக்கிய மேகலா ராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உண்டு. இதையடுத்து 2-வது பிரசவத்துக்காக ஆரோக்கிய மேகலா ராணி கடந்த 1 மாதத்துக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில், கடந்த 2-ந் தேதி மனைவியையும், குழந்தையையும் பார்ப்பதற்காக ஏசுராஜன் திண்டுக்கல்லில் இருந்து குமரிக்கு வந்தார். இங்கு மனைவியின் வீட்டில் தங்கியிருந்த அவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதுகுறித்து மனைவி அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, தனக்கு ஒன்றுமில்லை என கூறினார்.
இந்தநிலையில், மனைவியின் வீட்டில் தங்கி இருந்த ஏசுராஜன் நேற்று முன்தினம் திடீரென தூக்கில் தொங்கினார். இதை பார்த்த மனைவியும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஏசுராஜனை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story