கர்நாடகத்தில் 4 எம்.பி.க்களின் பதவி காலம் நிறைவடைகிறது
டெல்லி மேல்-சபை தேர்தல் அட்டவணையை சட்டசபை செயலாளர் வெளியிட்டார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 4 எம்.பி. இடங்களுக்கு நடைபெறும் டெல்லி மேல்-சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலுக்கான அட்டவணையை சட்டசபை செயலாளர் மூர்த்தி வெளியிட்டார்.
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் எம்.பி.க்களாக இருப்பவர்கள் ரகுமான்கான், ராஜீவ் சந்திரசேகர், ராமகிருஷ்ணா, பசவராஜ் பட்டீல். இவர்களின் பதவி காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) மாதம் 2-ந் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து டெல்லி மேல்-சபையில் காலியாகும் அந்த 4 இடங்களுக்கான தேர்தல் 23-ந் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் 5-ந் தேதி (அதாவது நேற்று) தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் மூர்த்தி நேற்று இந்த தேர்தலுக்கான அரசாணையை பிறப்பித்து அட்டவணையை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியாகும் 4 இடங்களுக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (அதாவது நேற்று) தொடங்கியது. மனுதாக்கல் வருகிற 12-ந் தேதி வரை நடைபெறும். 13-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 15-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
தேவைப்பட்டால் அதாவது போட்டி இருந்தால் 23-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். 26-ந் தேதி தேர்தல் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும்.
தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் டெபாசிட்டாக ரூ.10 ஆயிரமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story