பெண் போலீஸ் அதிகாரி உடலை தேடும் பணி தீவிரம்
பெண் போலீஸ் அதிகாரி உடலை தேடும் பணி தீவிரம் இன்ஸ்பெக்டர் பண்ணை வீட்டில் சோதனை.
மும்பை,
நவிமும்பை பெண் போலீஸ் அதிகாரி கொலை வழக்கில் அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கொலையில் தொடர்புடைய சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் பண்ணை வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
நவிமும்பை கொங்கன் பவனில் உள்ள போலீஸ் குடியுரிமை பாதுகாப்பு பிரிவில் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அஸ்வினி கோரே. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென மாயமானார். இது குறித்து பெண் போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் நவிமும்பை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் அதிகாரியை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் அஸ்வினி கோரே மாயமான சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபய் குருந்கர், முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேயின் உறவினர் ராஜேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், 4 பேரும் பெண் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டரை கொலை செய்து உடலை வசாய் கழிமுகத்தில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி அஸ்வினி கோரேயின் உடல் இன்னும் கைப்பற்றப்படவில்லை. கொலையாளிகள் அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி வசாய் கழிமுகப்பகுதியில் வீசியதாக கூறப்படுகிறது.
தற்போது போலீசார், பெண் அதிகாரியின் உடல் பாகங்களை வசாய் கழிமுகப்பகுதியில் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த தேடுதல் பணியில் போலீசாருக்கு உதவியாக 6 கடற்படை வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போலீசார் நேற்று முன்தினம் கோலாப்பூர் அஜாராவில் உள்ள சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபய்குருந்கரின் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கொலை வழக்கு தொடர்பாக முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கொலை செய்யப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் கணவர் ராஜூ கூறுகையில், “கொலை வழக்கு தொடர்பாக சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் பண்ணை வீட்டில் இருந்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினர். ஆனால் அது என்ன என்பது குறித்து எதுவும் கூறவில்லை” என்றார்.

Related Tags :
Next Story