மனைவியை எரித்துக்கொன்ற கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை எரித்துக்கொன்ற கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை கோர்ட்டு  தீர்ப்பு
x
தினத்தந்தி 7 March 2018 4:00 AM IST (Updated: 7 March 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

குடிக்க பணம் தர மறுத்த மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு காசிபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 32). டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மகாதேவி (29). குடிப்பழக்கத்துக்கு அடிமையான சரவணன், 2012–ம் ஆண்டு நவம்பர் 5–ந் தேதி குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார்.

ஆனால் மகாதேவி பணம் கொடுக்க மறுத்ததால் அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி சரவணன் தீவைத்தார். இதில் பலத்த காயமடைந்த மகாதேவி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச்சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 7–வது குற்றவியல் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே சரவணன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கில் சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பளித்தார். இதையடுத்து புழல் சிறையில் சரவணன் அடைக்கப்பட்டார்.

Next Story