நடிகர் உபேந்திரா பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம் ஆர்.அசோக் பேட்டி


நடிகர் உபேந்திரா பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம் ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 7 March 2018 4:53 AM IST (Updated: 7 March 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் உபேந்திரா பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம் என்று ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

நடிகர் உபேந்திராவின் கட்சியான கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதாவில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர் பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம். ஆனால் இதுவரை அவர் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. பெங்களூருவில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. குண்டர்களின் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

பெங்களூருவில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால் நாங்கள் கடந்த 4 நாட்களாக ஒவ்வொரு தொகுதியிலும் பெங்களூருவை பாதுகாப்போம் என்ற பெயரில் பாதயாத்திரையை நடத்தி வருகிறோம். இன்று(அதாவது, நேற்று) சாம்ராஜ்பேட்டையில் இந்த யாத்திரையை நடத்துகிறோம். இந்த ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட தயாராகிவிட்டனர்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஆளும் காங்கிரஸ் ஆட்சி மீதான எதிர்ப்பை ஓட்டுகள் மூலம் தெரிவிப்பார்கள். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் சட்டம்–ஒழுங்கை சீராக பராமரிப்போம். ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிப்போம். மக்கள் நிம்மதியாக வாழ தேவையான நடவடிக்கை எடுப்போம். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story